மத்திய பட்ஜெட் குறித்து விஜய் பேசாதது ஏன் என கேட்ட கேள்விக்கு நடிகர் சௌந்தரராஜா பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தற்காலிகமாக ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்த படம் முடித்த கையோடு தளபதி விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் குறித்து சில கேள்விகள் நடிகர் சௌந்தரராஜாவிடம் கேட்கப்பட்டுள்ளது.
அதாவது மதிய பட்ஜெட் குறித்து விஜய் ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன் பட்ஜெட் பற்றி அவருக்கு தெரியுமா? தெரியாதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சௌந்தர்ராஜா அது எப்படி தெரியாமல் இருக்கும் நாங்கள் மூன்றாம் ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடினோம் அதற்கான நேரம் வரும்போது தலைவர் கண்டிப்பாக அதற்கான விளக்கத்தையும் அதைப்பற்றியும் பேசுவார். என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


