Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படம் குறித்து சரத்குமார் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

actor sarathkumar about varisu movie update

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், நடிகர் சாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் படத்தில் நடித்து வரும் சரத்குமார் ஒரு பேட்டி ஒன்றில் படத்தின் கதைக்களம் குறித்து பேசி உள்ளார். அதாவது வாரிசு திரைப்படம் வெறும் பேமிலி டிராமா மட்டும் கிடையாது. விஜய் படத்துக்கு உரித்தான காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், எமோஷன், பாடல்கள், டான்ஸ் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தளபதி விஜய் பான் இந்தியா திரைப்படங்களில் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறார் எனவும் பாராட்டியுள்ளார்.

actor sarathkumar about varisu movie update
actor sarathkumar about varisu movie update