நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவரது படங்கள் எல்லாம் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வியாபாரம் ஆகும், வசூலிலும் கலக்கும்.
இப்போது அவர் பிஸியாக விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வேலைகளில் இருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஒருபக்கம் செல்ல டப்பிங் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது.
நடிகையை பற்றி வந்துள்ள ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால் நயன்தாராவின் எல்லா படங்களுக்கும் தீபா வெங்கட் தான் டப்பிங் பேசுவார். ஆனால் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவே தனது வேடத்திற்கு டப்பிங் பேசுகிறாராம்.
சொந்த குரலில் நயன்தாரா தன் படத்திற்கு டப்பிங் பேசுவது இது இரண்டாவது முறை, இதற்கு முன் நானும் ரவுடித்தான் படத்திற்கு முதன்முதலாக டப்பிங் பேசியிருந்தார்.
தற்போது டப்பிங் நயன்தாரா கொடுத்து வருவதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் கூறியுள்ளார்.
#Kanmani anbodu Kaadhalan Naan ezhudhiya dialogues neeyae dub panradhu migundha sandhosham ????????????☺️????❤️ #KaathuVaakula started dubbing for #KaathuVaakulaRenduKaadhal @VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @anirudhofficial @Rowdy_Pictures @7screenstudio @SonyMusicSouth pic.twitter.com/DUmsYFDpQe
— Vignesh Shivan (@VigneshShivN) December 2, 2021

