‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான ’99 சாங்ஸ்’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். தற்போது ‘மூப்பிலா தமிழ் தாயே’ என்ற பாடலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
அதில் ஒரு சிறுமி ஏ.ஆர்.ரகுமானின் முதல் படமான ‘ரோஜா’ படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலை இந்தி மற்றும் தமிழ் மொழியில் பாடுகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி, லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram

