Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்ருதி ஹாசன் நடிக்கும் புதிய படம்.. இயக்குநர் யார் தெரியுமா?

Shruti Haasan Teams Up with Tarun Teja for Arun Viswa's Next Film

நவம்பர் 24-ம் தேதி சாந்தி டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஸ்ருதி ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தை தருண் தேஜா எழுதி இயக்குகிறார். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

தருண் தேஜாவின் தனித்துவமான எழுத்து மற்றும் காட்சியமைப்புகள் இணைந்து, ரசிகர்களுக்கு புதியதொரு விறுவிறுப்பான சினிமா அனுபவத்தை வழங்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் அருண் விஸ்வா மற்றும் படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், “கலை என்பது அமைதியற்றவர்களை ஆறுதல்படுத்தவும், வசதியாக இருப்பவர்களைச் சிந்திக்கத் தூண்டவும் வேண்டும்” என்ற பேங்க்ஸியின் புகழ்பெற்ற பொன்மொழியுடன் படத்தின் அறிவிப்பைப் பகிர்ந்துள்ளனர்.

மேலும், “ஃபேண்டஸி, குடும்பக் கதை, கிராமத்துக் காதல் கதை என எங்களது ஒவ்வொரு திரைப்படமும் வெவ்வேறு படைப்புப் பயணங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அந்த வரிசையில், உலகளாவிய பார்வையாளர்களைக் கவரும் வகையில் புதிய ஜானர் மற்றும் கதைக்களத்தை இந்தப் படத்தின் மூலம் முயற்சிக்க ஆர்வமாக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

பன்முகத் திறமையாளரான ஸ்ருதி ஹாசனுடன் இந்தப் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.