‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில், சுஷின் ஷியாம் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சீன்’. இப்படம் குறித்த அறிவிப்புகள் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், வரும் அக்டோபர் 25-ஆம் தேதி துபாயில் உள்ள புகழ்பெற்ற சிலிக்கான் சென்ட்ரல் மால் வளாகத்தில் மாலை 6 மணி முதல் #SceneLiveInDubai என்ற பெயரில் பிரம்மாண்ட புரமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் டீசர், ட்ரெய்லர் அல்லது மூன்றாவது சிங்கிள் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களிலும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘சீன்’, வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சூர்யா, ஜோதிகா மற்றும் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகையான நஸ்ரியா ஆகியோர் இணைந்துள்ள இப்படம், ஜித்து மாதவனின் கலகலப்பான திரைக்கதையில் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Habibi, Dubai! 🇦🇪 Mark your calendars – #SceneLiveInDubai 🧨 is happening on October 25th at @silicon_central Mall, from 6 PM onwards! 🔥
Worldwide In cinemas from November 6! #DiwaliRelease
@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @ZhagaramOffl @rajsekarpandian @2D_ENTPVTLTD https://t.co/aJASNqU5Yi
— Scene (@SceneTheMovie) October 21, 2026

