Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

I’m Learning the Madurai Dialect – Actress Preethi Mukundan

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக உழைத்ததாகவும், ஆக்‌ஷன் காட்சிகள் கதையுடன் இணைந்து பயணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு தனக்கு 4 படங்கள் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், சினிமாத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கியிருப்பதில் மிகுந்த சந்தோஷம் என்றும் பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்து பேசிய அவர், தனுஷுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருவதாகவும், அதில் மதுரை பெண்ணாக நடிப்பதாகவும் கூறினார். முதன்முறையாக கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதால், அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்த மதுரை மக்களின் பழக்கவழக்கங்களை ஒருவரிடம் கற்றுக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

“திருச்சியில்தான் வளர்ந்தேன். மதுரைக்கு அடிக்கடி சென்றிருக்கிறேன் என்பதால் அந்த ஊரைப் பற்றி நன்றாக தெரியும். இருந்தாலும், மதுரை மக்களின் உடல்மொழி, பேச்சுவழக்கு உள்ளிட்டவற்றை தெரிந்துகொண்டு, கதாபாத்திரத்தை இன்னும் நுணுக்கமாக செய்வதற்காக பயிற்சி எடுத்து வருகிறேன்” என பிரீத்தி முகுந்தன் கூறினார்.

மேலும், ‘அன்பில் அவன்’ படத்தில் அசோக் செல்வனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும், யாரையும் தனது ரோல்மாடலாக எடுத்துக்கொள்ளாமல், தானாகவே இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.