Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna Opens Up About Her Busy Schedule

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகான தனது வாழ்க்கை மற்றும் திரைப்பயணம் குறித்து ராஷ்மிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

“சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டாலும், அதன்பிறகு எனது வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. எனது திரைப்பயணம் வழக்கம்போல மிகவும் பிஸியாகத் தொடர்ந்து வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் விஜய் குறித்து பேசிய ராஷ்மிகா, “நானும் விஜய்யும் முதலில் நல்ல நண்பர்களாக இருந்தோம். தற்போது வாழ்க்கைத் துணையாக இருக்கிறோம். விஜய் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர். அதே நேரத்தில் தனது வேலையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருவதால் ஏற்பட்டுள்ள வேலைப்பளு குறித்துப் பேசிய அவர், “அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருவதால் சரியாகத் தூங்கக்கூட நேரமில்லை. ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.