இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
மீனவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்குள் நடைபெறும் படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஷ் மற்றும் ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, சூரியின் நடிப்பு மற்றும் அவரது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக ‘மண்டாடி’ படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ‘மண்டாடி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு, நடிகர் சூரி மற்றும் படக்குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.
ரஜினிகாந்தின் பாராட்டு குறித்து சூரி தனது சமூக வலைதளப் பதிவில், “அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Superstar Rajinikanth Sir watched and loved our #Mandaadi. His heartfelt call means the world to me and our entire team. This picture captured the priceless moment of hearing his voice on the other end! ❤️🙏@rajinikanth sir 🙏🙏🙏
அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த… pic.twitter.com/RYNPUzFqUj
— Actor Soori (@sooriofficial) September 14, 2026

