நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’. சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர்., இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சிம்பு – வெற்றிமாறன் – அனிருத் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த கூட்டணி, ‘அரசன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு தொடர்ந்து வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A surprise pop-in from Rockstar @anirudhofficial on the sets of #ARASAN 👑
Great energy with @SilambarasanTR_ and #Vetrimaaran as the shoot rolls on.@VijaySethuOffl #SilambarasanTR @iYogiBabu @VelrajR @theVcreations @RIAZtheboss @prosathish pic.twitter.com/TbZgRj78Qq
— Kalaippuli S Thanu (@theVcreations) August 26, 2026

