செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 2022-ல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவான இப்படத்தில், கருணாஸ், காளி வெங்கட், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
வெளியான நாள் முதல் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், தற்போது உலகளவில் ரூ.55 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வசூலின் மூலம், விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் ரூ.50 கோடியை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை ‘கட்டா குஸ்தி 2’ பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 2026-ஆம் ஆண்டில் ரூ.50 கோடி வசூலை கடந்த 8-வது தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.
My first ₹50 crore grosser… and a moment I’ll never forget..
To everyone who bought a ticket, laughed, cheered, and celebrated #GattaKusthi2 – thank you from the bottom of my heart.
Your love is my biggest strength. I’ll continue working harder, telling better stories, and… pic.twitter.com/ZKAjOZEvmk
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) July 21, 2026

