நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உணர்வுப்பூர்வமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், “சில நேரங்களில் மன அமைதியை அடைய, பல முட்டுக்கட்டைகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். இன்று அந்த அமைதி என்னை வந்தடைந்துள்ளது. இனிமேல் என் குரலையும், என் வாழ்க்கையையும் நானே தேர்ந்தெடுக்கிறேன். யாருடைய அனுமதியும் தேவையில்லை; பயமும் இல்லை. எனக்கான பாதையில் நான் பயணிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கிட்டத்தட்ட மறந்துபோன என் வாழ்க்கையை மீண்டும் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். நீண்ட நாட்களாக மனதில் இருந்த சில விஷயங்களை இப்போது வெளிப்படுத்துகிறேன். எப்போதும் எனக்கு துணையாக இருந்த ரசிகர்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றி. இது என் குணமடையும் பயணத்தின், சுதந்திரத்தின், எனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் புதிய தொடக்கம்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், நடிகர் துருவ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் குறித்து முன்பு பரவிய காதல் மற்றும் பிரேக்-அப் வதந்திகளுடன் தொடர்புபடுத்தி ரசிகர்கள் பல்வேறு யூகங்களை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், இந்த பதிவு அந்த வதந்திகளை உறுதிப்படுத்துவதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

