Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜூன் 5-ல் திரைக்கு வரும் ‘பரிமளா அண்ட் கோ’!

Parimala and Co to release in June

ஜெயராம் மற்றும் ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘பரிமளா அண்ட் கோ’, வரும் ஜூன் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், யோகி பாபு, சாண்டி, மிஷ்கின், பூர்ணிமா ரவி மற்றும் ஜிகேஎம் தமிழ்குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சாதாரண குடும்பத்தைச் சுற்றி நிகழும் மர்மமான கொலை சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவாகும் சுவாரஸ்யமான நிகழ்வுகளே படத்தின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபாக்ஸ்ன் இசையமைத்துள்ள நிலையில், பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பையும், கலை கிங்சன் சண்டைக் காட்சிகளையும் கவனித்துள்ளனர்.

‘தலைவன் தலைவி’ படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகும் இந்த திரைப்படம், குடும்பம், நகைச்சுவை மற்றும் மர்மம் கலந்த வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது