Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராம் சரணின் “பெத்தி” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Trailer Release Date Announced for Ram Charan’s “Peddi” Movie

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு மற்றும் பொம்மன் இராணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பல்வேறு ஒத்திவைப்புகளுக்குப் பிறகு, “பெத்தி” திரைப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தின் டிரெய்லர் வரும் மே 18ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.