Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

Nithya Menon takes on a new role as a producer!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

வரலட்சுமி சரத்குமார் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் தமிழில், 180, மாலினி 22 பாளை​யங்​கோட்​டை, காஞ்​சனா 2, ஓ காதல் கண்​மணி, மெர்​சல், திருச்​சிற்​றம்​பலம் உள்பட பல படங்​களில் நடித்​திருப்​பவர், நித்யா மேனன். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடப் படங்​களில் நடித்து வருகிறார்.

‘திருச்​சிற்​றம்​பலம்’ படத்​தில் நடித்​தற்​காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் ‘ இட்லி கடை’ படத்தில் இணைந்து நடித்தார்.

இப்​போது தயாரிப்பு நிறு​வனத்​தைத் தொடங்​கி​யுள்​ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்ள இவர், தனது தயாரிப்பு நிறு​வனத்​துக்கு ‘கியூரி புரொடக் ஷன்’ என பெயர் வைத்துள்​ளார்.

‘நான் நடிக்​கத் தொடங்​கிய முதல் நாளிலிருந்தே இது எனது நோக்​க​மாக இருந்து வரு​கிறது. இப்போது ஒரு தயாரிப்பாள​ராக, நான் அதே நோக்​கத்​துடன் தொடர்வேன். நான் தயாரிக்​கும் படங்​கள் மூலம் பார்வையாளர்​களிடம் மாற்​றத்தை ஏற்​படுத்​து​வதே எனது குறிக்​கோள்’ என கூறி​யுள்ள அவர், தனது முதல் தெலுங்கு படமான ‘ஆலா மொதலிந்​தி’​யின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கியூரி புரொக்டஷன்ஸ் என்னென்ன படங்கள் தயாரிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Nithya Menon takes on a new role as a producer!
Nithya Menon takes on a new role as a producer!