Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

Bhagat Fasil gives update on Aavesam 2

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில் தகவல் பார்ப்போம்..

பகத் பாசில், ஹிப்ஸ்டர், மிதுன் ஜெயசங்கர், ரோசன் என பலர் நடித்து 2024-ல் வெளியான மலையாளப் படம் ‘ஆவேஷம்’. ஜீத்து மாதவன் இயக்கிய இப்படம், கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்ற கேள்வி ரசிகர்களால் கேட்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பகத் பாசில் இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், ‘ஆவேஷம் 2’ படத்தின் பணிகள் 2027 அல்லது 2028-ல் தொடங்கும் என கூறியுள்ளார். இயக்குநர் ஜீத்து மாதவன், தற்போது சூர்யா நடிக்கும் 47-வது படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தின் பணிகள் முடிந்தபின் ‘ஆவேஷம் 2’ படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

இச்சூழலில், மோகன்லால், மீனா நடித்து வெளியான ‘திருஷ்யம்-3′ படத்தை தொடர்ந்து 4-வது பாகம் உருவாகும்? என்ற கேள்விக்கு இயக்குநர் தெரிவிக்கையில், இதற்கு மேலும் கதையை விவரிக்க விரும்பவில்லை’ என கூறியுள்ளார். தமிழில் இப்படம் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் , ‘பாபநாசம்’ என பெயரில் வெளியாகி வரவேற்பு பெற்றது நினைவுகூரத்தக்கது.

Bhagat Fasil gives update on Aavesam 2
Bhagat Fasil gives update on Aavesam 2