Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என் வாயில் நெருப்பு புகைந்தால் என் வீட்டில் அடுப்பு புகையாது.. டி ஆர் ராஜேந்தர் பேச்சு.!!

director t rajender latest speech update

நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் பின்னணி பாடகர் என பன்முகம் திறமை கொண்டவர் டி ராஜேந்தர். இவரது மகன் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் உயிருள்ளவரை உஷா படத்தின் ரீ ரிலீஸ் செய்தியாளர் சந்திப்பில் டி ராஜேந்தர் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் வழக்கம் போல் அவரது பாணியில் நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம்மடிக்க மாட்டேன் என் வாயில் நெருப்பு புகைந்தால் என் வீட்டில் அடுப்பு புகையாது என்றெல்லாம் பேசி உள்ளார்.

இது மட்டுமில்லாமல் என் மகன் நடித்த படம் வேண்டுமானால் “தம்”மாக இருக்கலாம் ஆனால் டி ஆர் அடிக்க மாட்டேன் தம்மு அதனால்தான் இன்று தம்பிடித்து பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இவரது ரைமிங் பேச்சுக்கு பல ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இவரது இந்த பேச்சை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

director t rajender latest speech update

director t rajender latest speech update