Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா – ரஜினி, கமல் பங்கேற்கிறார்களா? – தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

'Parasakthi' audio launch - Will Rajinikanth and Kamal participate? - Update from the producer

‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா – ரஜினி, கமல் பங்கேற்கிறார்களா? – தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

பராசக்தி மற்றும் ஜனநாயகன் இரு படங்களும் பொங்கலை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றன. ஜனநாயகன் ஆடியோ லான்ச் கோலாகலமாக நடைபெற்றது தெரிந்ததே. விழாவில் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதற்கு போட்டியாக பராசக்தி ஆடியோ லான்ச் நடைபெறும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது.

இச்சூழலில் ‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘பராசக்தி’ படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் முதல்முறையாக ரவிமோகன் வில்லனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ந்தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

9-ந்தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கொடுத்துள்ளார். பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3-மந்தேதி நடத்தவுள்ளோம். இந்த விழாவில் ரஜினி, கமல் பங்கேற்பதாக வரும் தகவல்கள் வதந்திதான். யார் கிளப்பி விடுகிறார்கள் என்றே தெரியவில்லை’ என கூறியுள்ளார்.

'Parasakthi' audio launch - Will Rajinikanth and Kamal participate? - Update from the producer
‘Parasakthi’ audio launch – Will Rajinikanth and Kamal participate? – Update from the producer