Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஞானத்தை அவமானபடுத்திய குணசேகரன்,விசாலாட்சி கொடுத்த ஷாக், இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது ஞானம் புதிய பிசினஸ் தொடங்க மீனாட்சி கும்பிட்டுக் கொண்டிருக்க உன் வாழ்க்கையை எப்பப்பா ஆரம்பிக்க போற என்று கேள்வி கேட்கிறார் குணசேகரன். உழைத்தவன் காவி வேட்டியை கட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்கேன் ஒன்னும் இல்லாதவனுக்கு பட்டு வேட்டி கேக்குதா என்று அவமானப்படுத்துகிறார்.

அதன் பிறகு கதிர் ஞானம் அண்ணாவும் நீ பெற்ற புள்ள தானே ஆசிர்வாதம் பண்ணி அனுப்ப மாட்டியா என்று கேட்க மாமியார் கிட்ட காசு வாங்கி தொழில் தொடங்குறான் அவனுக்கு நான் ஆசீர்வாதம் பண்ணனுமா என்று அதிர்ச்சி கொடுக்கிறார் விசாலாட்சி.

அடுத்ததாக பிசினஸ் தொடங்கும் இடத்திற்கு எல்லோரும் வர ரேணுகா இந்த ஐடியாவை கொடுத்தது யாருன்னு தெரியலையே என்று கோபப்பட கரிகாலன் என்ட்ரி கொடுத்து இந்த பிசினஸ் தொடங்க ஐயா கொடுத்தது நான்தான் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Ethir neechal serial episode update
Ethir neechal serial episode update