தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லி பிரதீப் நடத்தையை குற்றம் சொல்லி அவருக்கு ரெக்கார்ட் கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார் கமல்ஹாசன்.
பிரதீப் வெளியேற்றம் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பலரின் கமலை கண்ட மேனிக்கு கழுவி ஊற்றி வருகின்றனர். பெரும்பாலான படங்களில் லிப் லாக் காட்சிகளில் நடித்த கமல்ஹாசன் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான யுகேந்திரன் அவர்களின் மனைவி நேரடியாக கமலை குற்றம் சாட்டி பேசியுள்ளார். புன்னகை மன்னன் படத்தில் 16 வயதே ஆன ரேகாவின் அனுமதியில்லாமல் அவருக்கு லிப் லாக் கொடுத்த விஷயத்தை பற்றி பேசி விமர்சித்துள்ளார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#BiggBossTamil7 #Yugendran wife direct attack on @ikamalhaasan he has no rights to talk about women safety after kissing Rekha without consent #PradeepAntony pic.twitter.com/XMS0YPrfna
— Abhishek (@funkyboss96) November 5, 2023

