Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷாக்கான பாக்யா. ராதிகா எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 16-10-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் இன்றைய எபிசோடில் பாக்கி அவை பார்க்கிற்கு அழைத்த கணேஷின் அப்பா அம்மா கணேஷ் திரும்ப வந்த விஷயத்தை அமிர்தாவை தேடி சென்னை வந்த விஷயத்தை சொல்ல அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் அவன் அமிர்தாவை எங்கேயோ பார்த்திருக்கான் போல என்று சொல்ல பாக்கியா இன்னும் அதிர்ச்சி அடைந்து அவருடைய போட்டோ கேட்க இவர்களின் போட்டோவை காண்பிக்க இவர் ரெண்டு நாளா வீட்டாண்ட தான் இருந்தாரு என்று சொல்ல இவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். எங்களுக்கு எங்க புள்ளையும் முக்கியம் எழிலும் முக்கியம், அமிர்தாவும் முக்கியம் இந்த பிரச்சினையில் என்ன பண்றதுன்னு தெரியல அதனாலதான் உங்ககிட்ட சொன்னோம் என சொல்கின்றனர்.

அதை தொடர்ந்து மறுபக்கம் ராதிகா கோபியிடம் எங்க அம்மாவுக்கு அறுபதாம் பிறந்தநாள் வருது சர்ப்ரைஸா அவர்களுக்கு ஏதாவது வாங்கி கொடுக்கணும் ரெண்டு சவரன்ல நகை வாங்கி தரலாம் இன்னைக்கு நீங்க பணத்தோட வந்துடுங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். இந்த நேரம் பார்த்து இன்னொரு பேங்கில் இருந்து போன் செய்து கிரெடிட் கார்டு பில் கட்டுங்க என சொல்கின்றனர்.

கணேசன் அப்பா அம்மாவை சந்தித்து விட்டு அதிர்ச்சியில் வந்த பாக்யாவை அமிர்தா என்ன ஆச்சிமா என்று விசாரிக்க வெயில் கொஞ்சம் அதிகம் அதான் டயர்டா இருக்கு என சொல்லி சமாளிக்கிறார். பாத்துட்டு வரணும் என்று சொல்ல பாக்கியா அதெல்லாம் வேண்டாம் சொல்லி கணேஷ் எப்படி இறந்தார் என்று விசாரிக்க அமிர்தா கணேஷ் உடனான உறவு குறித்து பேச பாக்கியா அதிர்ச்சியில் உறைகிறார்.

அடுத்து ராமமூர்த்தி நிலா பாப்பாவை பார்க்கிற்கு அழைத்துச் செல்லப் போவதாக சொல்ல பாக்கியா அதெல்லாம் எங்கேயும் போக வேண்டாம் வீட்டிலேயே விளையாடட்டும் என்று சொல்கிறார். ஈஸ்வரி காரணம் கேட்க பாக்யா திகைத்து நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 16-10-23
baakiyalakshmi serial episode update 16-10-23