Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஈஸ்வரி சொன்ன வார்த்தை. ஷாக்கான பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 07-10-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் செழியம் ஹாஸ்பிடல் சென்னியிடம் என்ன பாப்பா தூங்கிட்டே இருக்கு என்று சொல்ல நைட் ரெண்டு மணிக்கு வந்து பாரு நல்லா பிரஷ்ஷா முழிச்சிட்டு இருக்கும் என கூறுகிறார்.

பிறகு பாக்கியா ஜெனியை நாங்க எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் என்று சொன்னதும் செழியன் மற்றும் ஜெனி இருவரும் பாக்யாவின் முடிவுக்கு ஓகே என்று சொல்ல ஜெனியின் அம்மாவும் ஓகே சொல்லி விடுகிறார்.

இதைத்தொடர்ந்து பாக்கியா வீட்டுக்கு வந்ததும் ஜெனி நம்ம வீட்டுக்கு தான் வரப்போறா என சொன்னதும் அதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு கான்டீன் கான்ட்ராக்ட் குறித்து கேட்க அந்த கான்ராக்ட் நமக்கு கிடைக்கல என கூறுகிறார்‌. அங்கேயும் ராதிகா புகுந்து ஏதாவது பண்ணிட்டாளா என்று ஈஸ்வரி கேட்க கோபி பார்த்த வேலையை பற்றி கூறுகிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதைத் தொடர்ந்து ஈஸ்வரி கோபியை விவாகரத்து பண்ணாம இருந்திருந்தால் இது எதுவும் நடந்திருக்காது. அவன் கூட இருக்கிற வரைக்கும் நிம்மதியாக தானே இருந்த என மொத்த பழியையும் தூக்கி பாக்கியா மீது போட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். அடுத்து கணேஷ் அமிர்தாவை தேடி அலைய அமிர்தாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என பக்கத்து வீட்டு பெண்மணி சொல்ல அதைக் கேட்டு அப்படி இருக்க வாய்ப்பில்லை என கூறுகிறார்.

அதன் பிறகு அமிர்தாவின் தோழி கணேஷை சந்தித்து அமிர்தவோட நம்பர் எல்லாம் என்கிட்ட இல்ல ஆனா அவருக்கு எழில் என்பவரோட கல்யாணம் ஆயிடுச்சு அவங்க மாமியார் பேரு பாக்கியா. ஈஸ்வரி புட்ஸ் என ஒரு கேட்டரிங் கம்பெனி நடத்திட்டு இருக்காங்க, அது மட்டும் தான் தெரியும் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 07-10-23
baakiyalakshmi serial episode update 07-10-23