தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினருடன் இணைந்து தீவிரம் காட்டி வரும் இவர் நேற்றைய தினம் கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது மேடையில் பேசத் தொடங்கிய திரிஷாவிடம் ரசிகர்கள் லியோ லியோ என கூச்சலிட்டு படம் குறித்த அப்டேட்டை கேட்டுள்ளனர். அதற்கு த்ரிஷா, “எப்பவுமே நீங்க இந்த கேள்வியை கேட்டுட்டே இருக்கீங்க எங்க போனாலும் கேட்க போறீங்க, நான் இப்போ லியோ படப்பிடிப்பில் இருந்து தான் வருகிறேன். அதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது, அப்புறம் லோகேஷ் ப்ரோ மற்றும் உங்க தளபதி ரொம்பவே நல்லா இருக்காங்க. மத்ததெல்லாம் லியோ இவெண்ட்ல பேசலாம் என கூறியுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.
Leo ???? update…unga thalapathy…????????#leo #TrishaKrishnan @actorvijay pic.twitter.com/11tdSb0muI
— ★ʙʟᴜᴅʏ ᴀʀꜰx★ⱽⁱʲᵃʸ♥️ᵀʳⁱˢʰᵃ (@Lazy_Rose_Baby) April 17, 2023

