Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எஸ் ஏ சி வீட்டிற்கு வந்த கோர்ட் உத்தரவு.. காரணம் என்ன தெரியுமா?. வைரலாகும் பரபரப்பு தகவல்

court-order-on-sachandrasekhar issue

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் இயக்கிய சட்டப்படி குற்றம் படத்தின் விளம்பர செலவுக்காக 76,112 ரூபாய் சரவணன் என்பவருக்கு வழங்க வேண்டி உள்ளது. ஆனால் அந்த பாக்கியத்தை செலுத்தாமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததால் அவர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எஸ்.ஏ சந்திரசேகர் வீட்டில் உள்ள ஏசி பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து அதிகாரிகள் கோர்ட் உத்தரவுபடி சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அதிகாரிகள் பொருட்களை ஜப்தி செய்ய போலீசார் உதவிநாடி கோர்ட்டில் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 court-order-on-sachandrasekhar issue

court-order-on-sachandrasekhar issue