தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரெமோ, ரஜினி முருகன் போன்ற படங்களில் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார்.
தனது சிரிப்பாலும் எதார்த்தமான நடிப்பாலும் பல ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தற்போது நிறைய படங்கள் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் தற்போது டாப் ஹீரோயினியாக உருவாகி உள்ளார்.
இவரது நடிப்பில் தற்போது மலையாளத்தில் “வாஷி” என்னும் திரைப்படம் netflix ott தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு பாடலை நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சொந்த குரலில் அழகாக பாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோவை பார்த்து மெய் மறந்த ரசிகர்கள் அதற்கு நிறைய லைக்ஸ்களை அள்ளி குவித்து வருவது மட்டுமின்றி இணையத்தில் வைரலாக்கியும் வருகின்றனர்.
View this post on Instagram

