விசுவின் மகள்கள் வருவதில் சிக்கல். நாளை இறுதி சடங்கு. உடல் துரைப்பாக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விசு. கடந்த சில நாட்களாக சிறு நீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது.

விசுவிற்கு உமா (சுந்தரி) என்ற மனைவியும் லாவண்யா, சங்கீதா, கல்பனா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி விட்டனர்.

அவர்களில் லாவண்யா மட்டும் சென்னைக்கு திரும்பி தந்தை விசுவுக்கு தொழிலில் உதவியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் மகள்கள் நாடு திரும்புவதில் தாமதங்கள் நிகழ்கின்றது. தற்போது உலகெங்கும் உள்ள கொரோனா தொற்றால் சர்வதேச விமான சேவைகள் முடங்கிப்போயுள்ள நிலையில் இன்னும் விசு குடும்பத்தினர் இறுதிச்சடங்கு குறித்து குடும்பத்தினர் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கு நாளை (திங்கட்கிழமை) பெஷன்நகர் மயானத்தில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும்,

Actor Visu Funeral Tomorrow at 12noon in Besantnagar cemetery ground. ஹவுஸ் adrs: Flat no 3A , Block B1 , PRAPANCHA apts , Masha Coil street ,Okkiyam Thoraipakkam, Chennai- 600097 daughter Lavanya number+91 95660 05701

ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், துரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் விசுவின் உடல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விசுவின் இழப்பு நாடக உலகிற்கும், திரையுலகிற்கும் பேரிழப்பு. இவரது இயக்கத்தில் நடித்த பலரும் இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

admin

Recent Posts

Jai Jai Ram Song

Jai Jai Ram Song | Ramayana | Namit M, Nitesh T | Ranbir, Yash |…

22 hours ago

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

2 days ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

2 days ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

2 days ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

2 days ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

2 days ago