குடும்பக் கதை அம்சம் கொண்ட திரைப்படங்களின் பிதாமகன் நடிகர் விசு!

மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றிய விசு, இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என திரைத்துறையின் முக்கிய துறைகளில் திறமை வாய்ந்தவர்.

1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என கடைசி வரை பணியாற்றி வந்தவர்.

குடும்பக் கதைகளை மையமாக வைத்து இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் உடன் மன்னன், உழைப்பாளி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் நெற்றிக்கண் படத்தின் கதாசிரியராக பணியாற்றியுள்ளார். அத்திரைப்படம் வெளியாகி வசூலைக் குவித்த நிலையில் தற்போது அந்தப் படத்தை தனுஷ் ரீமேக் செய்யவிருப்பதாக தகவலறிந்து அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார் விசு.

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் கொரோனா அச்சம் காரணமாக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இறுதிச்சடங்கு குறித்து குடும்பத்தினர் தரப்பில் விரைவில் அறிவிக்கப்படும்.

admin

Recent Posts

Jai Jai Ram Song

Jai Jai Ram Song | Ramayana | Namit M, Nitesh T | Ranbir, Yash |…

20 hours ago

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

2 days ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

2 days ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

2 days ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

2 days ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

2 days ago