village-where-he-was-shooting-near-vlathikulam
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. குமாரசக்கணபுரம், வீரகாஞ்சிபுரம், ஊசிமேசி யாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குமாரசக்கணபுரம் கிராமத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் விஷாலிடம் அக்கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக கிராம மக்கள் கூறினர். இதையடுத்து, விஷால் லட்சக்கணக்கில் செலவு செய்து போர்வெல் எந்திரங்கள் மூலம் அங்குள்ள கண்மாயின் கரையில் சுமார் 60 அடி ஆழம் போர் அமைத்து, 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து பொதுமக்கள் தண்ணீர் பிடிப்பதற்கு ஏதுவாக 6 குழாய்களையும் பொருத்தி கொடுத்துள்ளார்.
இப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில் கிராம மக்களிடம் பணிகள் நிறைவடைந்த பின் அதன் திறப்பு விழாவிற்கு தான் கட்டாயம் வருவதாக கூறி சென்றுள்ளார். நடிகர் விஷால் படப்பிடிப்பிற்கு வந்த இடத்தில் கிராம மக்களின் தண்ணீர் தேவையை அறிந்து சொந்த செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து குமாரசக்கணபுரம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சென்னம்மாள் கூறியதாவது, நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக வந்த போது என்னிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று விஷால் கேட்டார்.நான் எனக்கு ஒன்றும் வேண்டாம், கிராமத்தில் தான் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.
அதற்கு ஏதாவது உதவ வேண்டும் என்று கூறினேன். அதுமட்டுமன்றி, நடிகர் விஷாலை பார்த்து ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க.. கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்று கேட்டேன்.’கல்யாணம் பண்ணிக் கிட்டா நான் படப்பிடிப்புக்கு வந்துருவேன்.. மனைவி வீட்ல தனியா இருக்கணுமே’ என்றார். மேலும், என்னை சென்னைக்கு வந்து விடுமாறும் கூறினார் என சென்னம்மாள் தெரிவித்துள்ளார். “,
Niram Tamil Movie Trailer | Mugen Rao & Preethi Asrani | Balaram Krishna | Zee…
Namit Malhotra’s Ramayana Tamil Trailer | Nitesh Tiwari | Ranbir, Yash, Hans Zimmer, A.R.Rahman
Ekavali Lyrical Video | Renigunta 2 | Sid Sriram | Johnny | Shali Nivekas |…
Kalavaadum Kanna Video Song | Address | Pradeep Kumar | Girish | Atharvaa, Esakki Bharath…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…