தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வலம் வருவது மட்டுமல்லாமல் பிரபல நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டி வருகிறார்.
கடைசியாக மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் மணிகண்டன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய் சேதுபதி.
அதிலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பிரபல நடிகரான விக்ரம் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மணிகண்டன் இயக்கத்தில் ஏற்கனவே ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை, காக்கா முட்டை உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்ற நிலையில் கடைசி விவசாயி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


