Vijay Sethupathi reveals update on Simran’s next film
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர், ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி கண்டது. இதையடுத்து, சிம்ரன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சிம்ரனின் அடுத்த படத்திற்கு ‘டீச்சர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான டைட்டில் டீசர் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
‘நீத்தோ’ படத்தின் மூலம் அறிமுகமான பாலு ஷர்மா, இந்த ‘டீச்சர்’ படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் சூப்பர் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
படத்தின் கதைக்களம், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய கல்லீரல்…
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து…
பிரபல தென்னிந்திய நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப்…
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.…
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…
மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…