மோகன்லால் மகள் விஸ்மயாவின் அறிமுக படம்… ‘துடக்கம்’ டிரெய்லர் வெளியீடு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இப்படத்தை, ‘2018’ திரைப்படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். விஸ்மயாவுடன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி, சாய்குமார், சித்திக், மனோஜ் கே. ஜெயன், ஜாபர் இடுக்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் மோகன்லால், தாமஸ் ஸ்காரியா IPS என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள நிலையில், ஜோமோன் டி. ஜான் ஒளிப்பதிவையும், சாமன் சாக்கோ படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றுள்ள விஸ்மயா, படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நேரடியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு, குட்டிக்கானம் மற்றும் கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள ‘துடக்கம்’ திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Suresh

Recent Posts

Mayil Veera Lyric Video

Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…

12 hours ago

FATHER Official Teaser

FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…

12 hours ago

Paranthu Pogum Manase Lyric Video

Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…

12 hours ago

Kudikara Nenju Lyric Video

Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…

12 hours ago

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

2 days ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

2 days ago