“அரசன்” படத்தில் சிம்புவுடன் தனுஷ் வருவாரா? இயக்குநர் வெற்றி மாறன் அதிரடி பதில்!

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “அரசன்” ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம், ‘வடசென்னை’ திரைப்படம் உருவான அதே காலக்கட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, “அரசன்” படம் ‘வடசென்னை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்பட்டாலும், அதில் எந்த உண்மையும் இல்லை என்று இயக்குநர் வெற்றி மாறன் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த நிலையில், ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் நடித்த ‘அன்பு’ கதாபாத்திரம் “அரசன்” படத்தில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த இயக்குநர் வெற்றி மாறன், “உண்மையில் அதைப்பற்றி இப்போது சொல்ல முடியாது. நான் முதலில் கதை எழுதுவேன், அதன் பிறகு படப்பிடிப்பு, மீண்டும் எழுதுதல், பின்னர் மீண்டும் படப்பிடிப்பு என்ற முறையில் தான் பணிபுரிகிறேன். முன்கூட்டியே எதையும் திட்டமிட முடியாது. எழுதும் போது அந்த எண்ணம் வந்தால், எல்லாம் சரியாக அமைந்தால் அது நடக்கும். இல்லையெனில் நடக்காது, அதுவே உண்மை” என்று தெரிவித்துள்ளார்.

Suresh

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

13 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

14 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

14 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

14 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

14 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

14 hours ago