Trisha as Preethi in Karuppu Movie
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்த படம் வருகிற 14-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Dream Warrior Pictures தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, நட்டி நட்ராஜ், சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், “கருப்பு” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதனைத் தொடர்ந்து, நடிகை திரிஷாவின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், திரிஷா ‘ப்ரீத்தி’ என்ற கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய கல்லீரல்…
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து நடித்து…
பிரபல தென்னிந்திய நடிகை மீனா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமூகக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப்…
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘துடக்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.…
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…
மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…