விஜய் சேதுபதி 51 படத்தின் லேட்டஸ்ட் தகவல் வைரல்

7C-ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இந்த படம், விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்தது.

இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இந்த படத்தை காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய முழு நீள கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இதுவரை மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்படாத பல முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சைனீஸ் சண்டை கலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சி, சேசிங் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மிகப்பிரபலமான பத்துமலை முருகன் கோவிலில், இறுதிக்காட்சியை படமாக்கி, படக்குழு படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது.

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த், யோகிபாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் இதன் பின்னணி வேலைகள் துவங்க இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vijay sethupathi 51 movie latest update
jothika lakshu

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

1 day ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

1 day ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

1 day ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

1 day ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

1 day ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

1 day ago