vijay-sangeetha-divorce-controversy details
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதன் பிரமோஷனுக்காக சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா சோபா சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுவரை நடிகர் விஜய் எல்லா சினிமா நிகழ்ச்சிகளிலும் தனது மனைவியோடு கலந்து கொண்ட நிலையில் இந்த முறை சங்கீதா நிகழ்ச்சிக்கு வரவில்லை.
அதேபோல் நடிகர் அட்லியின் மனைவி பிரியாவின் சீமந்த நிகழ்ச்சியிலும் விஜயின் மனைவி சங்கீதா வரவில்லை. இதற்கு பல விஷயங்கள் காரணமாக சொல்லப்பட்டு வந்த நிலையில் விக்கிப்பீடியா பக்கத்தில் நடிகர் விஜய் தன்னுடைய மனைவியை கடந்த 2022 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து விட்டதாக பதிவாகியுள்ள தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
யார் வேண்டுமானாலும் விக்கிப்பீடியா பக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பதால் மர்ம நபர்கள் சிலர் இவ்வாறு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் மீண்டும் சில மணி நேரங்களில் விக்கிப்பீடியா பக்கத்தில் திருத்தம் செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Mudhal Parvai Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
MANASU THANNALA Lyrical Video | Ravi Teja | GV Prakash | Hesham | Shiva Nirvana…
Karuppu Aadu Lyrical Video | Maaruvesham | Vaibhav | Viyana | Srini | Rajkumar Amal
All Pass Teaser | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen | Senthikumari,…
Atrocity Music Video | Pyaar Prema Kalyanam | Elan, Saanve, Yuvan Shankar Raja | Netflix…
நடிகர் மோகன்லாலின் மகளும், தற்போது திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வரும் நடிகையுமான விஸ்மயா மோகன்லால், தனது உடல் எடை மற்றும்…