Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருப்பதிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்

Vignesh Shivan and Nayanthara in Tirupati Temple

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் கையிலெடுத்து விக்னேஷ் சிவன் அழகிய காதல் கதையை படமாக கொடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக விக்னேஷ் சிவன் நயன்தாரா ஆகியோர் திருப்பதி சென்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்குகள் குவிந்து வருகின்றன. மேலும் படம் வெற்றி அடையவும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ‌