கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த வாரிசு திரைப்படம் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.
அதன்படி, வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படம் வெளியான வாரிசு திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Nanum Ippo Unakku Oru Fan Dhane ????
இந்திய தொலைக் காட்சிகளில் முதன் முறையாக புத்தம் புதிய மெகாஹிட் திரைப்படம் "வாரிசு"!
ஏப்ரல் 14 மாலை 6.30 மணிக்கு..#SunTV #Varisu #VarisuOnSunTV #WorldTelevisionPremiere #ThalapathyVijay #30YearsOfSunTV pic.twitter.com/wVLxcSwt0U
— Sun TV (@SunTV) April 7, 2023

