தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விக்ரம். வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தற்போது பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்திருந்தது.
தற்போது இப்படத்திற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கும் விக்ரமின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
3 SHADES Of #Thangalaan ????????#ChiyaanVikram | #GVP | #PaRanjith pic.twitter.com/wr7X3ffdzs
— Saloon Kada Shanmugam (@saloon_kada) July 6, 2023

