Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

படம் பிடிக்கலனா இப்படியா பண்ணுவீங்க.. கோபத்தில் விஜய் ரசிகர்கள் செய்த வேலை.. வைரலாகும் வீடியோ

Thalapathy Vijay Fans Violence in Madurai

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்த திரைப்படம் சூப்பர், சுமார், எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கலவையான விமர்சனங்களை சந்தித்து வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் மதுரையில் பிரபல திரையரங்கு ஒன்றில் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற விரக்தியில் விஜய் ரசிகர்கள் திரையரங்கத்தின் ஸ்கிரீனை கொளித்தி உள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் மதுரை மாநகரமே பரபரப்பாகியுள்ளது. படம் பிடிக்கலன்னு இப்படியா பண்ணுவீங்க?? என பலரும் சமூக வலைதளங்களில் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.