thalapathi 67 movie new character update
கோலிவுட் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து ரஷ்மிகா மந்தனா, யோகி பாபு, பிரபு, சரத்குமார், சங்கீதா, ஷாம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படம் குறித்து எந்த ஒரு உறுதியான அறிவிப்பும் இதுவரை வெளிவராமல் இருக்கும் நிலையில் இப்படத்தில் இணைய இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மன்சூர் அலிகான் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவும் வைரலாகி வருகிறது. அதில் அவர், எனது அன்பு தம்பி லோகேஷ் படத்தில் இணைய மகிழ்ச்சி என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…