தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர்களுக்காக நடைபெற்ற முடிந்த இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஹர்ஷினி நேத்ரா.
அசத்தலான குரல் வளத்தால் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்த நிலையில் நேற்று ரிசல்ட் வெளியாகியிருந்தது. இதை அடுத்து ஹர்ஷினியின் மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
450 க்கும் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஹர்ஷினி 384 மதிப்பெண் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி காரணமாக சரியாக படிக்கவில்லை, அப்பா அம்மாவின் ஆசியை நிறைவேற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் 11 ஆம் வகுப்பில் காமர்ஸ் குரூப் எடுத்து படிக்க விரும்புவதாகவும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அப்பா அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


