Srileela to star opposite Dhanush... Official announcement released
தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீலீலா… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார் சாய் அபயங்கர். அடுத்து ஹீரோயினாக அமரன் படத்தை தொடர்ந்து சாய்பல்லவி ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீ லீலா கமிட் ஆகியுள்ளார்.
‘இதை நீங்க எதிர்பார்க்கவில்லை தானே’ என்று டி 55 படத்தில் ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று புகைப்படங்களை நெட்டிசன்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். ஹீரோயின் குறித்த வுண்டர்பாரின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ‘இந்த ஹீரோயினை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தனுஷ் அண்ணா. சாய் பல்லவி பெயரை அறிவிப்பீர்கள் என்று பார்த்தால் ஸ்ரீலீலா இருக்கிறாரே. ஸ்ரீலீலா செமயாக டான்ஸ் ஆடுவார். அவரும், தனுஷும் சேர்ந்து ஒரு ஸ்பெஷல் பாட்டுக்கு டான்ஸ் ஆட வேண்டும். அது கண்டிப்பாக ரவுடி பேபி மாதிரி ஹிட்டாகும் எனவும்,
தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூரை நடிக்க வைப்பார்கள்னு பார்த்தால் இப்படி ஏமாற்றிவிட்டார்களே. மிருணாள் நடித்திருந்தால் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்திருக்கும் தனுஷ்ணா எனவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் சிலரோ தனுஷுக்கும், ஸ்ரீலீலாவுக்கும் இடையேயான வயது வித்தியாசம் என்னவென்று கூகுள் செய்து கொண்டிருக்கிறார்கள். தனுஷுக்கு 42 வயதாகிறது. ஸ்ரீலீலாவுக்கு 24 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியோ ரீல் வேறு ரியல் வேறு தானே.!
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs