‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர்- 2 படப்பிடிப்பில் உள்ளார். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதனையடுத்து கமலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதனை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

சுமார் 40 வருடங்களாக ரஜினி-கமல் சேர்ந்து நடிக்கவில்லை. அவர்களை சேர்த்து நடிக்க வைப்பதற்கான முயற்சிகளை யாரும் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.

இப்போது இரண்டு பேருமே தங்களது திரைப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள். எனவே, அவர்களை சேர்த்து நடிக்க வைத்துவிடுங்கள் என படைப்பாளிகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வந்தார்கள்.

இந்நிலையில், தலைவர்-173 படத்தை இளம் இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. ‘இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் திருப்தியை தரும்’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சிபி. இதற்கு பிறகு ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படம் தொடங்குகிறது. இந்த இரு படங்களும் ஆக்சன் கதைக்களத்தில் இருந்து விலகி, ஃபீல் குட் மூவியாக உருவாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

‘Rajini 173’ will be satisfying: Director Sibi Chakraborty assures
dinesh kumar

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

1 day ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

1 day ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

1 day ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

1 day ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

1 day ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

1 day ago