உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ‘வாரணாசி’..!

உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ‘வாரணாசி’..!

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் இந்தியாவுடன் சேர்ந்து கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளில் படமாக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படம் அண்டார்டிகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் அண்டார்டிகாவில் படமாக்கப்படும் முதல் இந்திய படம் என்ற புதிய சாதனையை ‘வாரணாசி’ படம் படைக்கும். இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலோ படக்குழு அண்டார்டிகா சென்று அங்கு சில காட்சிகளை படமாக்கும் என்று கூறப்படுகிறது. ராஜமௌலி அங்கு என்ன மாதிரியான காட்சிகளை காட்டப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த படத்தில் மகேஷ்பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’யாகவும் பிரித்திவிராஜ் ‘கும்பா’ என்ற வேடத்திலும் நடிக்கின்றனர். இந்த படம் 2027 ஏப்ரல் 7-ந்தேதி திரைகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்களிலேயே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘வாரணாசி’ படம் குறித்து ராஜமௌலி தெரிவிக்கையில்.’ இப்படம் ஒரே பாகமாக வெளியாகும். அதன் ஓட்ட நேரம் சுமார் 3 மணி நேரம் இருக்கும்’ என கூறியுள்ளார்.

‘Varanasi’ that made the world look back..!
dinesh kumar

Recent Posts

ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ – திரை விமர்சனம்

கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…

20 minutes ago

ப்ராமிஸ் – திரை விமர்சனம்

கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…

43 minutes ago

‘பாகுபலி 3’ உருவாகிறதா?… மரண மாஸ் அப்டேட்!

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…

48 minutes ago

உலக அரங்கில் மீண்டும் இந்தியாவுக்கு பெருமை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘கோல்டன் பிளேட்’ விருது!

இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…

54 minutes ago

ஆட்டோ இம்யூன் நோயால் பாதிப்பு… மனம் திறந்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம்…

1 hour ago

மம்மூட்டியின் பத்ம பூஷண் விருதை கேக் வெட்டி கொண்டாடிய ‘ஓம்’ படக்குழு!

இந்திய சினிமாவின் பெருமைமிகு நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி, இந்திய அரசின்…

1 hour ago