தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி… ‘D55’ செம அப்டேட்!

தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி… ‘D55’ செம அப்டேட்!

‘அமரன்’ படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் படம் டி55. இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது மம்முட்டியும் டி 55 படத்தில் நடிக்கிறார்.

6 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் அவர் நடிப்பில் கடைசியாக உருவான படமான பேரன்பு 2019 ஆம் ஆண்டில் ரிலீஸானது. அதன் பிறகு, தற்போது கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார்.

தனுஷுக்கு தன் தலைவரான ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருப்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு இதுவரை கிடைக்காவிட்டாலும், தலைவர் படத்தில் நடித்தவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்த மம்முட்டியுடன் நடிக்கவிருக்கிறார் தனுஷ். டி55 படத்தில் நடிக்கும்போது தளபதி பட அனுபவம் குறித்து மம்முட்டியிடம் கேட்டு தெரிந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ‘ராயன்’ படத்தில் தனுஷின் தங்கையாக நடித்துக் கொண்டிருந்த துஷாரா விஜயன், அதே நேரத்தில் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்திலும் நடித்தார். துஷாரா விஜயன் ‘ராயன்’ ஷூட்டுக்கு வந்தால், ரஜினி பற்றி கேட்டிருக்கிறார் தனுஷ். மேலும், ‘உன்னை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது, தலைவருடன் சேர்ந்து நடிக்கிறாய்’ என்று துஷாரா விஜயனிடம் கூறியிருக்கிறார்.

டி55 படத்தை முன்னதாக கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகிக்கொள்ள தனுஷும், ஆர்.டேக் ஸ்டுடியோஸும் சேர்ந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

Mammootty joins Dhanush’s film… ‘D55’ is a great update!
dinesh kumar

Recent Posts

டி.சி திரைப்பட விமர்சனம்

தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…

14 hours ago

டேர் டெவில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…

14 hours ago

இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…

15 hours ago

சம்பளம் மட்டுமல்ல… செல்வாக்கிலும் கெத்து! இந்தியாவின் டாப் 10 நடிகைகள்!

திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…

15 hours ago

மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘வாரணாசி’ படத்தின் ‘ருத்ரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…

15 hours ago

சென்னையில் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…

15 hours ago