sirakadikka-aasai serial today-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரூமுக்குள் வந்த ரவி பீல் பண்ண ஸ்ருதி எனக்கு உன் கூட இருக்கணும் அவ்வளவு தான், நான் சந்தோஷமா தான் இருக்கேன் என ரவியை ஆறுதல் படுத்துகிறார்.
அதனைத் தொடர்ந்து முத்து அப்பா ஹாலில் படுத்து தூங்குவதை நினைத்து வருத்தப்பட மீனா நீங்க ரூமை பூட்டாம இருந்தா இந்த பிரச்சினையை வந்து இருக்காது. ரூமை பூட்டியதும் நீங்கதான் கட்டில கொடுத்ததும் நீங்கதான், ஆனா எல்லாரும் நீங்க செஞ்ச கெட்டதை மட்டும் தான் சொல்லுவாங்க என்று சொல்ல முத்து அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை கிடையாது என கூறுகிறார்.
நீங்க கோபத்தையும் குடியையும் விட்டால் மகான் மாதிரி வாழலாம் என்று சொல்ல நான் மனுஷனாவே இருந்துட்டு போறேன் என்று முத்து விடுகிறார். அடுத்ததாக ரவி நன்றாக தூங்கிக் கொண்டிருக்க மொட்டை மாடியில் டென்ட் ரெடி பண்ண ஸ்ருதி ரவியை எழுப்பி வா வெளியே போலாம் என்று மொட்டை மாடியில் அழைத்துச் செல்ல நாம இங்கதான் தூங்க போறோம் என்று சொல்ல இந்த குளுரிலா என்று கேட்க ஸ்ருதி இங்க ஒரு ரூம் இருக்கு என டென்ட் போட்டு இருப்பதை காட்டுகிறார்.
பிறகு இருவதும் ரொமான்ஸாக பேசி டெண்டுக்குள் சென்று படுத்து தூங்க மறுநாள் விஜயா மீனாவை காபி போடச் சொல்லி ரவிக்கும் சுருதிக்கும் எடுத்து போக மனோஜ் ஒர்க் அவுட் செய்ய மொட்டை மாடியில் வருகிறார்.
விஜயா இருவரும் ரூமில் ஆளில்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மேலே வந்த மனோஜ் டென்ட் போட்டு இருப்பதை பார்த்து திருடர்கள் வந்துவிட்டதாக பயந்து கீழே ஓடி வருகிறார். கீழே வந்து விஷயத்தை சொல்ல எல்லோரும் மொட்டை மாடிக்கு சென்று திருடர்கள் என நினைத்து ஆளுக்கு ஒரு ஆயுதத்துடன் நெருங்குகின்றனர்.
யாருடா உள்ள என அடிக்க போக நாங்கதான் என சுருதியும் ரவியும் வெளியே தலைகாட்ட எல்லோரும் ஷாக் ஆகின்றனர். ரூம் இருக்கும்போது எதுக்கு மொட்டை மாடிக்கு போய் தூங்கு நீங்க என்று அண்ணாமலை கேட்க ஸ்ருதி நான் டென்ட் வாங்கிட்டேன் அதுல தான் படுத்து தூங்க போறேன்னு பிக்ஸ் பண்ணிட்டேன் அப்படி நடக்கலனா எனக்கு தூக்கமே வராது என சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து சுருதி டெண்ட்டை கழட்டிக் கொண்டிருக்கும் போது அவருடைய அம்மா போன் செய்ய டென்ட் போட்டு தூங்கணும் அதை கழட்டிட்டு இருக்கேன் என்று சொல்ல நடந்த விஷயத்தை முழுசாக கேட்காமல் உனக்கு ரூம் கூட கொடுக்கலையா என கோபப்பட்டு போனை வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…