தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மனோஜ் ரவி மூவரும் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். மனோஜ் ரவியிடம் முத்து சொல்வதை எல்லாம் கேட்காமல் நீ உங்க மாமியார் கொடுக்கிற காசு இல்ல ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணிடு. இவ்வளவு நாள் நீ சமையல்காரனா இருப்ப என்று கேட்க நான் செஃப் என்று சொல்லுகிறார். ஆனால் ரவி எனக்கு என் பொண்டாட்டி வீட்ல இருந்து வர காசை வச்சு முன்னேறனும்னு எந்த அவசியமும் இல்லை என்று சொல்ல முத்து சூப்பர்டா என்று சொல்லி விட்டு அவங்க நல்லதுக்கு சொன்னா கூட யோசித்து பார்த்திருக்கலாம் ஆனா குடும்பத்தை பிரிச்சு உன்னையும் பல குரலையும் இங்கிருந்து கூட்டிட்டு போயிட்டு வாங்க என்று சொல்லுகிறார்.
உடனே மனோஜ் அவனுக்கு மாமியார் வீட்டில் எந்த காசும் வரவில்லை. அதனால அவன் அப்படி சொல்றான் அவங்க கொடுத்த வாங்கிக்காம இருப்பானா என்று சொல்ல உடனே ரவி அவன் ஒன்னும் உன்னை மாதிரி கிடையாது என்று சொல்லுகிறார் அப்போ நான் மாமியார் வீட்டு சொத்துக்காக காத்துக்கிட்டு இருக்கேனா என்று சொல்ல அதுல என்ன சந்தேகம் என்று இருவரும் சொல்லுகின்றன. உடனே மனோஜ் உனக்கு போய் அட்வைஸ் பண்ண வந்தன் பாரு என்று சொல்லிவிட்டு சென்றுவிட முத்து நீ உன் முடிவில் உறுதியா இரு கண்டிப்பா நீ முன்னேறி வருவ என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் கிச்சனில் மீனா ஸ்ருதி மற்றும் ரோகினி மூவரும் பேசிக்கொண்டிருக்க ரோகினி ஸ்ருதியிடம் இது நல்ல வாய்ப்புதான இது பயன்படுத்திக்கிறதுக்கு ரவி ஏன் தயங்குறாரு நீங்க அவர் மேல கோபப்படுவது தப்பே இல்ல என்று சொல்ல, மீனா நீங்க ஏன் இப்படி பேசுறீங்க என்று கேட்கிறார். பிறகு உதாரணத்திற்காக நீங்க மாமாவோட காசை ஜீவா கொடுத்ததா சொல்லி ஷோரூம் ஓபன் பண்ணீங்க என்று சொல்ல உடனே ரோகினி இப்போ எதுக்கு இந்த விஷயத்துக்கு வரீங்க நீங்களும் முத்துவும் எப்ப பார்த்தாலும் இதே தான் பேசிகிட்டு இருக்கீங்க நான் ஸ்ருதி பிரச்சனைக்கு பேசினா நீங்க எதுக்கு என் பிரச்சனைக்கு வரீங்க என்று கேட்க உடனே சுருதி என்னால நீங்க எதுக்கு சண்டை போடுறீங்க என்று சொல்ல நான் இங்க வந்து பேசியே இருக்க கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
உடனே மீனா சரி அவங்களை விடுங்க ரவிக்கு சொந்தமா உழைச்சு முன்னேறி ரெஸ்டாரன்ட் வைக்கணும்னு ஆசை இருக்கு அதுல இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறார்.அவருக்குனு ஒரு சுயமரியாதை இருக்கும்ல என்று சொல்ல எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு அவங்களுக்கு அப்புறம் எல்லாம் சொத்து எனக்கு மட்டும்தான் அப்படி இருக்கும் போது அதிலிருந்து ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிறதுல என்ன சுய மரியாதை போயிட போகுது இப்போ ரவி அப்பா அம்மா எனக்கு ஏதாவது கொடுத்தாங்கனா அத நான் வாங்கிட்டா அப்ப என்னோட சுயமரியாதை போயிடுமா என்று மீனாவிடம் கோபமாக பேசிவிட்டு சென்று விடுகிறார் உடனே முத்து கிச்சனுக்கு வந்து மூணு பேரை பேசிகிட்டு இருந்தீங்கன்னு வரல என்று சொல்ல சுயமரியாதை என்றால் கெட்ட வார்த்தையா என்று மீனா கேட்கிறார். சுருதிக்கிட்டு அந்த வார்த்தை சொன்னதுக்கு அவங்க கோபமா பேசிட்டு போறாங்க என்று சொல்ல பரவால்ல விடு பல குரல் நாளைக்கு வந்து உன்கிட்ட நார்மலா பேசும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் மீனா மண்டபத்திற்கு டெக்ரேசன் ஆர்டர் எடுக்க போக அங்க இருக்கும் மேனேஜர் நீங்க அனுப்புன டெக்கரேஷன் அவர்களுக்கு பிடிச்சிருச்சு என்று சொல்லுகிறார். சின்ன சின்னதா எதுவும் கொடுக்காமல் ஃபுல் ஆர்டர் எனக்கு கிடைக்குமா என்று கேட்க கொஞ்சம் பொறுமையா இரும்மா எல்லா ஆர்டரும் உனக்குத்தான் என்று சொல்லிவிட்டு எவ்வளவு பட்ஜெட் ஆகும் சொல்லுமா என்று கேட்கிறார் 2 லட்சம் ஆகும் என்று சொல்ல கொஞ்சம் அதிகமா இருக்கேமா என்று கேட்கிறார் இல்ல நான் பூவெல்லாம் கொஞ்சம் பிரஷ்ஷா இருக்கிறது தான் வாங்குவேன் அப்பதான் அழகா இருக்கும் என்று சொல்லுகிறார் அப்போ நான் ரெண்டரை லட்சம் அவங்க கிட்ட சொல்லிடுறேன் ஏன்னா எங்களுக்கு கமிஷன் வேணும் என்று சொல்லுகிறார். மீனா சரி என சம்மதித்து விட்டு அட்வான்ஸ் வாங்க போக அந்த மேனேஜர் பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு கொடுக்கிறார். மீனா சென்றவுடன் உடனே சிந்தாமணி வர அவர் நீங்க சொன்ன மாதிரி நான் கையெழுத்து வாங்கிட்டேன் என்று சொல்லுகிறார் நீங்க தானே இந்த ஆர்டர் எடுப்பீங்க எதுக்கு அந்த பொண்ணு கிட்ட கொடுக்க சொன்னீங்க, இது மட்டும் இல்லாம அந்த பொண்ணு உங்களுக்கு எதிராக வளந்துட்டு வருது என்று சொல்ல வரட்டும் நல்லா பூத்துக் குலுங்கட்டும் அப்பதானே புடுங்கி போட முடியும் என்று திட்டம் போடுகிறார்.
வீட்டுக்கு சந்தோஷமாக வந்த மீனா முத்துவிடம் எனக்கு வாழ்த்து சொல்லுங்க என்று கேட்கிறார். எதுக்கு என்று கேட்க பண்ணுங்க என்று சொல்ல வாழ்த்துக்கள் மீனா அவர்களே என்று சொல்லுகிறார். பிறகு ஆர்டர் கிடைத்த விஷயத்தை இரண்டு லட்ச ரூபாய் ஆர்டர் இது கிடைச்சா நம்மளுக்கு 50,000 கையில இருக்கும் என்று சொல்ல முத்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். மீனாவை முத்து தூக்கி சுத்தி சந்தோஷப்பட குடும்பத்தினர் வந்து விடுகின்றனர். பிறகு அவர்களிடம் என்ன சொல்லுகின்றனர்? அதற்கு குடும்பத்தினர் ரியாக்சன் என்ன? மனோஜ் என்ன சொல்லுகிறார்?அதற்கு அண்ணாமலை கொடுத்த பதில் என்ன?என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.


