விஜயா கேட்ட கேள்வி.. சிந்தாமணி கொடுத்த பதில்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் வந்து ரவியும் ஸ்ருதியும் பேசுகின்றனர் நீ இவ்ளோ சீக்கிரம் வந்துருவன்னு எனக்கு தெரியும் என்று சொல்ல நான் இந்த வீட்டுக்கு தங்கறதுக்காக வரல நடக்கிறது எல்லாம் பார்த்தால் நான் இங்கே இருக்கவே முடியாது போல என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்ற விஜயா கேட்க நீத்து பூக்கடை திறந்திருக்கும் விஷயத்தையும் அவருக்கு சிந்தாமணி தான் பூ சப்ளை செய்கிறார் என்ற விஷயத்தையும் சுருதி சொல்லுகிறார். அவ பணக்காரி பூ கடை திறந்துட்டு போகட்டுமா அதனால என்ன பிரச்சனை என்று கேட்க பிரச்சனையே அங்க தான் இருக்கு அவ பூக்கடைக்கு ரவியோட பெயரை வச்சிருக்கா என்று சொல்லுகிறார். இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் போட்டா ரவியும் அவளும் லவ் பண்ற மாதிரி ஆகிடாதா என்று ஸ்ருதி கோபப்படுகிறார். உடனே ரவி நான் இதை பற்றி யோசிக்கவே இல்லை என்று சொல்ல நீ முதல் இருந்தே யோசிச்சிருந்தா இந்த நிலைமைக்கு வந்து இருக்காது அதே மாதிரி சிந்தாமணி மீனாவுக்கு நிறைய பிரச்சனை கொடுத்திருக்காங்க மீனா அமைதியா இருந்தாங்க ஆனா என் லைஃப்ல ஏதாவது பிரச்சனை பண்ணா நான் சும்மா விட மாட்டேன் சொல்லி வைங்க என சொல்லிவிட்டு வார்னிங் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்.

விஜயாவும் சரி நான் சிந்தாமணியை பார்த்து பேசுறேன் என்று சொல்லி முடிவெடுக்கிறார். மறுபக்கம் மனோஜ் ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கிருஷ் வந்து அப்பா என்னோட மார்க் சீட் பாருங்கள் நான் எல்லாத்துலயும் முதல் மார்க் வாங்கி இருக்கேன் அப்பாவோட சைன் வாங்கிட்டு வர சொன்னாங்க நீங்க சைன் போடுங்க என்று சொல்ல மனோஜ் கிருஷ் இடம் கோபமாக நடந்து கொண்டு பிடித்து தள்ளி விடுகிறார் இதனால் கடையில் இருப்பவர்கள் மனோஜை ரவுடித்தனம் செய்றவர் போல இருக்கிறது என்று சொல்லுகின்றனர். உடனே ரோகினி வந்து நான்தான் மனோஜ் கிருஷ் கூட்டிட்டு வந்தேன் நீ எதுக்கு இப்போ கோவமா நடந்துக்குற அவங்க அப்பா கிட்ட சைன் வாங்கணும்னு சொன்னாங்க அதனால தானே கூட்டிட்டு வந்தேன் என்று கண்கலங்கி டிராமா போடுகிறார். உடனே அங்கிருப்பவர்கள் இந்த ஆள் என்ன இப்படி இருக்கான் பெத்த பையனையும் பொண்டாட்டியும் கூட பாக்க மாட்டேங்குறான் இவன் கடையில பொருள் வாங்கினால் உருப்படாது என்று பொருள் எரித்தல் செய்துவிட்டு சென்று விட ரோகிணி கண்களை தொலைத்து விட்டு மனோஜை பார்த்து இளக்காரமாக சிரித்துவிட்டு சென்றுவிடுகிறார்.

பிறகு பார்வதி குழந்தைகளுக்கான விடுகதையை கூறி கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் சிந்தாமணி அதை கேட்டு சந்தோஷப்படுகிறார் கதை பேசி முடிந்த பிறகு விஜயா வந்துவிட சிந்தாமணி இடம் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கிற சிந்தாமணி நீங்க எனக்கு நல்லது பண்ணுவீங்கன்னு தான் நினைச்சேன் ஆனா இப்படி பண்ணிட்டீங்களே என்று கேட்கிறார் உடனே சிந்தாமணி ஒருவேளை இவங்க வீட்டுக்காரர் நம்ப தான் ஆள வச்சு தள்ளிவிட்டோம் என்று தெரிந்திடுச்சா என்று மனதில் நினைக்க ரவி ஸ்ருதி விஷயம் பற்றி சிந்தாமணி சொல்லுகிறார் உடனே நிம்மதி அடைந்த சிந்தாமணி இது உங்களுக்காக தான் நான் பண்ண மாஸ்டர் நான் பூ கொடுக்கலைன்னா அந்த நீத்து கடைக்கு வேற யாருனா பூ கொடுக்க தான் போறாங்க ஆனா ரவிய வச்சு என்ன திட்டம் போடுறான் என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? அதனாலதான் அவ என்கிட்ட சொல்லுவா அத நான் வந்து உங்ககிட்ட சொல்லுவ நம்ம ரவி வாழ்க்கைல பிரச்சனை இல்லாம பாத்துக்கலாம் என்று சொல்ல விஜய் அமைதியாகி விடுகிறார். மீண்டும் ரவியும் சுருதியும் வீட்டுக்கு வர அண்ணாமலை வரவேற்கிறார் நான் ஆண்டியை பார்த்து பேச தான் அங்கிள் வந்தேன் என்று சொல்லி அண்ணாமலை இடம் நீத்து பற்றிய விஷயத்தை சொல்லுகின்றனர். நீங்க பேசினீங்களா ஆன்ட்டி என்று கேட்க நான் பேசிட்டேன்மா சிந்தாமணி நம்மளுக்கு நல்லது தான் பண்றாங்க என்று சொல்லுகிறார்.

அவங்க எப்படி நல்லது பண்ணுவாங்க அவங்க நல்லது பண்ற ஆளே கிடையாது என்று சொல்ல சிந்தாமணி சொன்ன விஷயத்தை ஸ்ருதியிடம் விஜயா சொல்லுகிறார். நான் அவங்க கிட்ட இதெல்லாம் பண்ண சொல்லி கேட்டனா என்று கேட்கிறார். நீ எதுக்கும் பயப்படாத மா நான் சிந்தாமணியை வைத்து ரவிப்பேர அந்த கடையிலிருந்து எடுக்க வைக்கிறேன் என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் வந்து என்ன சொல்லுகிறார்? அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial episode update 17-03-26
jothika lakshu

Recent Posts

Alaakaa Loova Lyrical Video

Alaakaa Loova Lyrical Video (Tamil) | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…

39 minutes ago

Kaadana Kaadu Lyrical Video

Kaadana Kaadu Lyrical Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika | Riythvika…

42 minutes ago

Mittai Mazhai Lyrical Video

Mittai Mazhai Lyrical Video | AOT | Dulquer Salmaan | Satvika | GV Prakash |…

49 minutes ago

Street Fighter Official Tamil Trailer

Street Fighter Official Tamil Trailer | In Cinemas October 16

52 minutes ago

Vaane Vaane Lyrical Video

Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…

1 day ago

Kalangathey Lyrical Video

Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash

1 day ago