Siragadikka Aasai Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவும் முத்துவும் காரில் பாட்டி ஊருக்கு கிளம்பிச் செல்ல மீனா வழியில் தன்னுடைய தங்கச்சியை பார்க்க காரை நிறுத்த சொல்லி அவளிடம் சென்று பேசுகிறார்.
அப்போது மீனாவின் தங்கச்சி மீனாவுக்கு பூ வைத்து விட காரில் இருந்து இறங்கி வரும் முத்து பணத்தை கொடுக்க அதை வாங்க மறுக்க முத்து கட்டாயப்படுத்தி பணம் கொடுக்கிறார். அந்த நேரம் பார்த்து முத்துவிடம் அடி வாங்கிய கந்து வட்டிக்காரர் இவனை பழி வாங்கணும் என திட்டம் போடுகிறார்.
அதன் பிறகு ரோகிணி ரூமில் இருக்க அவளது தோழி ஏதாவது சமைக்கலாமா இல்ல ஆர்டர் பண்ணலாமா என கேட்க காசு எதுக்கு செலவு பண்ணனும் வீட்ல என்ன இருக்கு என்று கேட்க தயிர் மட்டும்தான் இருக்கு என சொல்ல அப்போ தயிர் சாதம் போதும் என சொல்கிறார். சாப்பாட்டுக்கே இப்படி கஷ்டப்படுறோம் இதுல எப்படி பியூட்டி பார்லர் ஆரம்பிக்க போற? பணம் எப்படி வரும் என கேட்க உடனே ரோகிணி விஜயாவுக்கு போன் போட்டு டிராமா போடுகிறார்.
மனோஜ்க்கு நீங்க வேற இடத்துல கூட பொண்ணு பாருங்க, எனக்கு ஒரு வருஷம் டைம் வேணும் என சொல்ல உங்களுக்கு உடனடியாக கல்யாணம் நடக்கணும் பணத்தை நான் தயார் பண்ற நீ சாயங்காலம் வந்து பணம் வாங்கிக்க என சொல்ல ரோகிணி சந்தோஷப்படுகிறார்.
பிறகு விஜயா அண்ணாமலைக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பும்போது அண்ணாமலை எங்க போற என தடுத்து நிறுத்தி கேள்வி கேட்க ரவி வருவதால் காய்கறி வாங்க போவதாக சொல்லி சமாளித்து வெளியே செல்கிறார். வெளியே வந்ததும் ரவி ஆட்டோவில் வந்து இறங்க அவனையும் சமாளித்து அங்கிருந்து கிளம்புகிறார் விஜயா.
பிறகு பார்வதியும் விஜயாவும் சேர்ந்து கந்துவட்டிக்காரர் ஒருவரை சென்று சந்திக்கின்றனர். ஏற்கனவே அந்த நபர் தன்னிடம் வீட்டு பத்திரத்தை வைத்து பணம் வாங்கி பணத்தை திருப்பி கட்டாத பெண்ணின் தாலி செயின் உட்பட அனைத்தையும் கழட்ட சொல்லி டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்.
இதையடுத்து விஜயாவும் பார்வதியும் அவரை சென்று சந்தித்து வீட்டு பத்திரத்தை கொடுத்து பத்து லட்சம் பணம் வேண்டும் என கேட்கின்றனர். டாக்குமெண்டை சரி பார்த்து விட்டு 10 லட்சம் பணத்தை எடுத்துக் கொடுக்கிறார். மேலும் எதுக்காக பணம் என்ன பிசினஸ் என கேட்க பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர் என்று சொல்ல சூப்பர் விஜயா சந்தோஷப்படுகிறார்.
இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…