Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ டிரெய்லர் வெளியீடு!

Samantha's ‘Engal Thangam’ Trailer Released

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தை ட்ரைலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் சமந்தாவுடன் குல்ஷன் தேவையா, திகந்த், கவுதமி, ஆனந்த், ஸ்ரீமுகி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், சமந்தாவின் கணவரான ராஜ் நிடிமோரு இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். குடும்ப உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் தமிழ் பதிப்பான ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.